Welcome to Sidharism

Search   in  

 Create an AccountHome | Submit News | Your Account | Content | Topics | Top 10  

Modules
· Home
· AvantGo
· Downloads
· FAQ
· Feedback
· Journal
· News
· Private Messages
· Recommend Us
· Search
· Statistics
· Stories Archive
· Submit News
· Surveys
· Top 10
· Topics
· Web Links
· Your Account

Who's Online
There are currently, 14 guest(s) and 0 member(s) that are online.

You are Anonymous user. You can register for free by clicking here

Languages
Select Interface Language:


  
Sidharism :: View topic - Kalathirai & Kazhuthirai Dosham
 Forum FAQForum FAQ   SearchSearch   UsergroupsUsergroups   ProfileProfile   Private MessagesPrivate Messages   Log inLog in 

Kalathirai & Kazhuthirai Dosham

 
Post new topic   Reply to topic    Sidharism Forum Index -> General
View previous topic :: View next topic  
Author Message
snandaca
Site Admin
Site Admin


Joined: Sep 27, 2017
Posts: 15

PostPosted: Thu Mar 08, 2018 3:53 pm    Post subject: Kalathirai & Kazhuthirai Dosham Reply with quote

https://youtu.be/7TntIfO1Rdc

இங்கே வெளியிடும் நாள்: இந்துவேத ஆண்டு 43,73,119 வருடம், 24 மாசி மாதம் (கி.பி. 08 Mar2018)
*களத்திர கழுத்திர தோசம்* :: 12வது பதினெண்சித்தர் பீடாதிபதி அருளியவை
பேரன்புடையீர்,
1) இன்றைய வழக்காட்டில் பிறப்பியல் (Astrology) , அதாவது சாதகத்தை (Horoscope) அடிப்படையாகக் கொண்டு, தங்களின் திருமண வாழ்வின் நிலைகளைப் பாதிக்கும் களத்திர தோசத்தை அறியும், சோதிடக்கலை இருந்து வருகின்றது.
2) களத்திர தோசத்தைப் பற்றிய பதினெண்சித்தர்கள் அருளிய அருளார்ந்த அறிவுரையை இங்கு நாங்கள் வழங்குகின்றோம்.
3) இதன் மூலம் மக்கள் களத்திற தோசத்தைப் பற்றிய தெளிவான அறிவையும் தங்களது தோசங்களுக்குரிய பரிகாரங்களையும் அறிந்து பரிகாரம் பெற்றிட, பதினெண்சித்தர்கள் அருளிய சாத்திரங்களை வழங்குகின்றோம்.
4) களத்திர தோசம் என்றால் என்ன?
1) களத்திர தோசம்...... 2) கழுத்திர தோசம் என்ற இரண்டு வகை உண்டு.
5) களத்தர கழுத்தர தோசங்கள் உள்ளவர்கள் பெரும்பாலும் கீழ்க்கண்ட வாழ்வியல் பிறச்சினைகளால் துன்பப்படுவர்.
*குழந்தை அல்லது வாரிசு இல்லாமை* ,
*நீண்ட காலத் திருமணத் தடை*,
*திருமண வாழ்வில் பிறச்சினைகள்*
*திருமண முறிவு*
*குடும்பத்தாரின் திடீர் மரணம்*
அல்லது *காணாமல் போதல்*
போன்ற பல பிறச்சினைகளால் துன்பப்படுவர்.
6) முதலில் களத்திர தோசத்தைப் பற்றிப் பார்ப்போம்.
7) அதாவது போர்களம், நெல் அடிக்கும் களம், தானியங்களை சேமிக்கும் களத்துமேடு. ஆடு மாடுகளை அடைத்து வைக்கும் களத்து வீடு என்ற தமிழ்ச் சொற்களால்... களம் என்றால் வாழுகின்ற அல்லது செயல்படுகின்ற இடம் என்பது தெரிகின்றது.
Cool இதுபோன்ற களத்தில் அதாவது வாழுகின்ற இடத்தில் உள்ள குற்றங்குறைகளை அருளுலக பாதிப்புகளைக் குறிப்பதே களத்திர தோசமாகும்.
9) ஒரு பெண்ணுக்கு செய்யப்படும் துரோகம் பல பிறவிகளுக்கு ஊழ்வினைச் சாபமாகவோ, நாக தோசமாகவோ, களத்திர தோசமாகவோ நம்மை பின் தொடர்ந்து வரும்.
10) அந்தப் பெண் யார்? துரோகம் செய்தது யார்? என்பதை கண்டுபிடித்து விட்டால் முதல் வெற்றியை அடைந்து விடலாம்.
11) ஒருவரின் குடும்பத்தை, குலத்தை தொடர்ந்து வந்து தொல்லைகளை தருகின்ற அந்த துரோகத்தை முழுமையாக தீர்த்துக்கொள்ள
1) துரோகம் இழைத்தவர் மன்னிப்பு கோருதலும்,
2) அந்த சாபத்தை கொடுத்தவரின் மன்னித்தருளலும்,
3) அந்த சாபத்தை நடைமுறைப்படுத்த பொறுப்பேற்றுக்கொண்ட தெய்வங்களின் மன்னித்தருளலும்
இந்த மூன்று மட்டுமே இந்த விதமான பாப சாபங்களிலிருந்து விடுதலை தந்தருளும்.
12) துரோகம் இழைத்தவர் தன் தவற்றை உணர்ந்து அந்தப் பிறச்சினையை அவருடைய வாழ்நாளில் முடித்துக் கொள்ளாவிடில் அது அவரது குடும்பத்தினரையும், வாரிசுகளையும் தாக்கும்.
13) இந்தப் பிறச்சினை முடிகின்ற வரையில் அவருக்கும் உயர் பிறப்புகளோ அல்லது தெய்வீக நிலையோ கிட்டாது.
14) சம்பந்தப்பட்ட தெய்வங்களின் அருளால் துரோகம் இழைத்தவருக்கு மூன்று பிறவிகள் கிட்டும்.
15) அவர் அந்த குலத்திலேயே பிறந்து யார் மூலமாகவோ தன் முற்பிறப்பு ஊழ்வினை (கர்ம வினை) களை உணர்ந்து தீர்த்துக்கொள்ள வாய்ப்புகள் வழங்கப்படும்.
16)இந்த பிறவிகளில் அவர் இந்த ஊழ்வினைகளில் இருந்து விடுபடாத பட்சத்தில் அந்த குலமானது வாரிசுகளை இழந்து அழிந்தே தீரும்.
17)ஆகவே பெண்களைப் போற்றுங்கள்! அவர்கள் போகப் பொருளல்ல!! அன்னையாக.. மனைவியாக,, மகளாக நம்மோடு வாழும் சத்தியாகப் போற்றுவோம் என்பதே பதினெண்சித்தர்கள் தமிழில் வழங்கிய மெய்யான இந்து வேதம் ஆகும்.
1Cool அடுத்ததாக கழுத்திர தோசம்; கழுத்திர தோசம் என்றால் சிறப்பாக பெண்கள் கமுத்தில் கட்டி கொள்ளப் போகும் தாலிக்குரிய கணவனுடைய உயிர் நிலை, உடல் நிலை எப்படியெப்படி இருக்கும் அல்லது எப்படியெப்படி பாதிக்கப்படும் அல்லது என்னென்ன பாதிப்புக்களை பெறும் என்கின்ற முடிவுகளை கண்டறிவதற்குரிய சாத்திரமாகும்.
19) அதாவது, கழுத்தில் காணப்படும் வரிகளைக் கொண்டு, கணிக்கபடும் தோசமே கழுத்திற தோசமாகும்.
20) அவர்களின் கழுத்திலே, நாகவரிகள் (அதாவது நாகப் பாம்பின் வடிவத்தை உருவாக்கும் வரிகள்) வீண்மீன் வடிவ வரிகள், குரங்கு, புலி , யானை, சிங்கம், கரடி, குதிரை, நரி , நாய், பூனை , ஆமை, முயல், நண்டு, மீன், மான், எருமை மாடு, பசு மாடு, ஆடு முதலியவைகளின் வடிவங்களை உண்டாக்கி தரும் வரிகள்.
21) ஆலமரம் , அரசமரம், பலாமரம் , மாமரம், நாவல் மரம், தென்னை மரம், வேப்ப மரம், பனைமரம், பல்வேறு வகையான கொடிகள் ,பல்வேறு வகையான செடிகள், தருப்பை புல் , கோரைப்புல், அருகம்புல் முதலிய புல்வகைகள் முதலியவற்றின் வடிவங்களை உண்டாக்கும் வரிகள் கமுத்தில் இயற்கையாக காணப்படும்.
22) அவைகளை கமுத்தில் மஞ்சள் தேய்த்து வெற்றிலை காம்பு, முல்லை அரும்பு, ஏதாவது ஒரு வகை பூவின் காம்பு, தருப்பை புல் முதலியவற்றை நீருற்றி குழைத்த சுண்ணாம்பில் தொட்டுஅங்கு தெரிகின்ற வரிகளின் மீது (இரேகை) புள்ளி புள்ளியாக வைத்து கண்டுபிடிக்கப்பட்டு கணிப்பதே கழுத்திரத்தோச கணிப்பு ஆகும்.
23) இந்த கழுத்திர தோசம் மூன்று வகை உண்டு; கழுத்தரம், கழுத்திரம், கழுத்திறம் என்ற மூன்று உண்டு.
24) அதே போல் களத்தரம்,களத்திரம் ,களத்திறம் என்று மூன்று உண்டு.
25) இந்த தோசங்களின் விளக்கங்களும், கணிப்புகளைப்பற்றிய குறிப்புகளும், பதினெண் சித்தர்களின் நூல்களில் தான் இவை உண்டு.
பதினெண்சித்தர்கள் அருளிய பூசாமுறைகளிலும் பூசாவிதிகளிலும் தங்களுடைய ஊழ்வினைச் சாபங்களையும், பாவங்களையும் , நாகதோசங்களையும், களத்திர கழுத்திர தோசத்தையும் பற்றி உணர்ந்து தெளிந்து அதிலிருந்து மன்னிப்புகேட்டு விடுபட 12வது பதினெண்சித்தர் பீடாதிபதி அவர்களின் அருளால் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களிலும் உள்ள அருட்கோட்டங்களில் குருவழி வாரிசுகளால் நிகழ்த்தப்படும் பூசைகளிலும் யாகங்களிலும் கலந்துகொள்ளுங்கள்.
Back to top
View user's profile Send private message Visit poster's website
Display posts from previous:   
Post new topic   Reply to topic    Sidharism Forum Index -> General All times are GMT + 10 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum

Powered by phpBB © 2001, 2005 phpBB Group


All logos and trademarks in this site are property of their respective owner. The comments are property of their posters, all the rest © 2005 by me.
You can syndicate our news using the file backend.php or ultramode.txt
PHP-Nuke Copyright © 2005 by Francisco Burzi. This is free software, and you may redistribute it under the GPL. PHP-Nuke comes with absolutely no warranty, for details, see the license.
Page Generation: 2.09 Seconds